திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 6 Aug 2019 10:45 PM GMT (Updated: 6 Aug 2019 7:49 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை.

திருச்சி,

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, கணேசன், ஜோசப் ஆகிய 3 பேர் பிஸ்கட் வடிவில் 446 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 13 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மற்றொரு விமானத்தில் வந்த மலேசியாவை சேர்ந்த அனிஷாபானு என்ற பெண் தனது உடலில் மறைத்து 280 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலி, வளையல் ஆகியவற்றை கடத்தி வந்தார். அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது. திருச்சி விமான நிலையத்தில் பெண் உள்பட 4 பயணிகளிடம் ரூ.26 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story