கீழ்பென்னாத்தூர் அருகே, ஒரே நாளில் 2 கோவில்களில் திருட்டு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


கீழ்பென்னாத்தூர் அருகே, ஒரே நாளில் 2 கோவில்களில் திருட்டு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Aug 2019 4:00 AM IST (Updated: 6 Aug 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் அருகே ஒரே நாளில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூரில் பெரியாயி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று உள்ளார். நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல் கீக்களூர் செல்லும் சாலையில் உள்ள பச்சையம்மன் கோவில் பூட்டும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த 2 சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளதால் ஒரே நபர்கள் தான் கை வரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story