சொத்து பிரச்சினையில் தகராறு: தம்பிக்கு அரிவாள் வெட்டு; விவசாயி கைது


சொத்து பிரச்சினையில் தகராறு: தம்பிக்கு அரிவாள் வெட்டு; விவசாயி கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 10:15 PM GMT (Updated: 6 Aug 2019 6:58 PM GMT)

குத்தாலம் அருகே சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 42). இவரது சகோதரர்கள் முத்துராமன் (38), பரணிதரன் (40). இவர்கள் அனைவரும் விவசாயிகள். இவர்கள் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் முத்துராமன், பரணிதரனிடம் சொத்துக்களை பிரித்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சொத்துக்களை உடனே பிரிக்க முடியாது என்று பரணிதரன் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த பரணிதரன், அரிவாளை எடுத்து வந்து முத்துராமனை வெட்டினார்.

கைது

மேலும் அங்கு இருந்த மற்றொரு சகோதரர் மூர்த்திக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த முத்துராமன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

Next Story