சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
வெம்பக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூருணியைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார் (வயது 25), மாரியப்பன் என்ற ஆனந்த் (22), காளிராஜ் (22).
விஜயகுமார் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனந்த், காளிராஜ் இருவரும் வாகன பழுதுபார்ப்பு மையத்தில் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Related Tags :
Next Story