தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்


தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்வு 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 8:10 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட கலந்தாய்விற்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

2019-ம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் 2-வது கட்ட மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், தேதி, இடம் உள்ளிட்ட விபரங்கள் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இணையதள விண்ணப்பத்தின் போது தெரிவிக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். இணையதளத்தில் மாவட்டத்தில் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்ற விபரம் தரப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாணவர்கள் தாங்கள் சேரவிரும்பும் தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை தேர்வு செய்யலாம். மேலும் தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம். மேலும் விவரங்களை 9941752604, 9499055881 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும், gitiperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story