சாலை அமைக்க குழி தோண்டிய போது பழங்கால கற்சிலை கண்டெடுப்பு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி கிராமத்தில் சாலை அமைக்க குழி தோண்டிய போது பழங்கால கற்சிலை கண்டெடுப்பு.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி கிராமத்தில் சின்னகவுண்டன் ஏரி பகுதியில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது பழங்கால கற்சிலை ஒன்று இருந்தது. இதுகுறித்து நல்லம்பள்ளி தாசில்தார் சவுகத்அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு சென்று கண்டெடுக்கப்பட்ட கற்சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சிலையை தர்மபுரி தொல்லியல் துறை அலுவலர்களிடம் தாசில்தார் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story