மின் மோட்டார் பழுதடைந்ததால் நெடிகாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு


மின் மோட்டார் பழுதடைந்ததால் நெடிகாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 10:43 PM GMT)

மின் மோட்டார் பழுதடைந்ததால் நெடிகாடு கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

குன்னூர்,

குன்னூரில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில்நெடிகாடுகிராமம் அமைந்து உள்ளது. இங்கு 100-க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமம்அதிகரட்டி பேரூராட்சியின்9-வதுவார்டிற்குட்பட்டதுஆகும்.இப்பகுதிமக்களுக்கு குடிநீர்ஆதாரமாக குடிநீர் கிணறுஉள்ளது. இங்கிருந்து மோட்டார் மூலம்தண்ணீர் பம்ப்செய்யப்பட்டு குடிநீர்தேக்கத்தொட்டிக்குகொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்துபொதுமக்களுக்கு குடிநீர்வழங்கப்படுகிறது.

இந்த நிலையில்தண்ணீர் பம்ப்செய்யும் மோட்டாரில் பழுது ஏற்பட்டதால்இப்பகுதிமக்களுக்கு கடந்த2வாரங்களாக குடிநீர்வினியோகம் செய்யப்படவில்லை. இதனால்அப்பகுதிமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து நெடிகாடுகிராம மக்கள் கூறியதாவது:-

எங்களதுகிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மின் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த 10நாட்களாக குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் 2 கிலோமீட்டர் தூரம்நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.இதன்காரணமாகவேலைக்கு சரிவர செல்லமுடியவில்லை.

எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சம்பந்தப்பட்டபேரூராட்சி அதிகாரிகள்உடனடியாக சீரமைக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story