வானவில் : கார் பராமரிப்பு சம்பந்தமான கேள்விகளும்? பதில்களும்!


வானவில் : கார் பராமரிப்பு சம்பந்தமான கேள்விகளும்? பதில்களும்!
x
தினத்தந்தி 7 Aug 2019 3:46 PM IST (Updated: 7 Aug 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருக்கும் வாகன பராமரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சுதிர் நடராஜன், கார் பராமரிப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்.

காரில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பாகங்கள் எவை?

ஒரு கார் செயல்பட வேண்டுமானால் அனைத்து பாகங்களும் சிறப்பாக இயங்க வேண்டும். ஆனால் அன்றாடம் காரை பயன்படுத்தும்போது சில முக்கியமான பாகங்கள் சரிவர செயலாற்றுகின்றனவா என்று பார்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக பிரேக். இதற்கு அடுத்தபடியாக வருவது விண்ட் ஷீல்ட். சாலையைத் தெளிவாக பார்க்க உதவுவதோடு, காற்று வேகத்தோடு காரினுள் வராமல் தடுப்பதும் இதுவே.

இத்தகைய விண்ட் ஷீல்ட் சுத்தமாக இருப்பதோடு வைப்பர் சரிவர இயங்குகிறதா என சோதித்துப் பார்க்க வேண்டும். மிக விரைவாக தேய்மானம் அடையும் பாகங்களில் வைபரும் ஒன்று. எனவே வைபர் இயக்கம் மற்றும் அதில் உள்ள பிரஷ்கள் தேயாமலிருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். பிரஷ்கள் தேய்ந்தால் உலோக பாகங்கள் கண்ணாடியில் ஸ்கிராட்சுகளை ஏற்படுத்திவிடும்.

வாகனங்களுக்கு அளிக்கப்படும் உத்தரவாதம் எந்தெந்த பொருட்களுக்குப் பொருந்தும்? குறிப்பிட்ட காலத்திற்கு முன் அவை செயலிழந்தால் வேறு புதிய பாகத்தை நிர்வாகம் மாற்றித்தருமா?

உத்தரவாம் என்பதே நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் மறு வடிவம்தான். இரண்டு ஆண்டு உத்தரவாதம் என்றால், நிச்சயமாக இரண்டு ஆண்டுகள் வரை எந்த பிரச்சினையும் வராது, அப்படி வந்தால் இலவசமாக பழுதுபட்ட பாகத்தை நிறுவனமே மாற்றித் தரும். அதற்குத்தான் உத்தராவதம் அவசியமாகிறது.

பொதுவாக கிழியக் கூடிய, உடையக் கூடிய அதாவது சீட் கவர், கண்ணாடி பாகங்களுக்கு உத்தரவாதம் இருக்காது. அதேபோல டயர், டியூப், கேபிள் வயர் போன்றவற்றுக்கு காப்பீடு வழங்கப்படாது. காப்பீடு எடுக்கும்போது எந்தெந்த சூழலில் இழப்பீடு கோரமுடியும். கோரும் தொகையில் எவ்வளவு கிடைக்கும் என்பன போன்ற விவங்களைக் கேட்டுப் பெறுவது மிகவும் வசதியாக இருக்கும்.

Next Story