வானவில் : லெனோவா டேப்லெட் வி7


வானவில் :  லெனோவா டேப்லெட் வி7
x
தினத்தந்தி 7 Aug 2019 8:41 PM IST (Updated: 7 Aug 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

லெனோவா நிறுவனம் புதிய ரக டேப்லெட்டை வி7 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.12,990.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த டேப்லெட் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் மாதம் அறிமுகமானது. அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் விரைவில் அறிமுகமாகும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடல் 6.9 அங்குல தொடு திரையைக் கொண்டது.

இதன் திரையில் 81 சதவீதம் வரை பயன்படுத்த முடியும். இதில் ஸ்னாப்டிராகன் 450 பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 4 ஜி.பி. ரேம் கொண்டது. இதன் நினைவக வசதி 64 ஜி.பி. ஆகும். இருப்பினும் இத்துடன் மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி இருப்பதால் நினைவகத்தை தேவைக்கேற்ப விரிவுபடுத்திக் கொள்ள முடியும். இந்த டேப்லெட்டின் பின்பகுதியில் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. அதேபோல 5 மெகா பிக்ஸெல் கேமரா முன்பகுதியிலும் உள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு வசதியான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதன் பின்பகுதியில் விரல்ரேகை உணர் சென்சார் உள்ளது.

இரண்டு சிம் வசதியோடு வந்துள்ள இந்த டேப்லெட் 5,180 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் உள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆகும் தன்மை கொண்டது. இதில் டால்பி ஆடியோ வசதி உள்ளது. இதில் கண் விழிப் படலத்தை ஸ்கேன் செய்து செயல்படும் மாடலும் வந்துள்ளது. இந்த மாடல் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கானது. லெனோவா வி 7 மாடலில் 2 வெர்ஷன்கள் வந்துள்ளன. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி கொண்ட மாடலின் விலை ரூ.12,990. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவக வசதி கொண்ட டேப்லெட் விலை ரூ.14,990.

Next Story