கைத்தறி பொருட்களை பயன்படுத்தி நெசவு தொழிலை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் - கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு
கைத்தறி பொருட்களை பயன்படுத்தி நெசவு தொழிலை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார்.
திருப்பூர்,
மத்திய அரசு சார்பில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக பிரதமரால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் சார்பில் தேசிய கைத்தறி தின ஒருநாள் சிறப்பு கண்காட்சி நேற்றுகாலை தொடங்கியது. கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்சீட்டுகள், துண்டு வகைகள், மிதியடிகள் என கைத்தறி பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜவுளி ரகங்களுக்கு தமிழக அரசால் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி பொருட்களை பயன்படுத்தி நெசவு தொழிலை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் 3 நெசவாளர்களுக்கு திறன் மிகு நெசவாளர் விருது மற்றும் சான்றிதழ்களையும், முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் ரூ.2 லட்சம் கடனுதவியும், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான நவீன ஜக்கார்டு எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வி, கண்காணிப்பாளர்கள் முருகையா, கஸ்தூரி, விக்ரமன், திருப்பூர் மற்றும் கோவை நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன், கூட்டுறவு சங்க மேலாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story