சிறுவாச்சூர் ஊர்சுத்தியான் பெரியசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு


சிறுவாச்சூர் ஊர்சுத்தியான் பெரியசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 6:53 PM GMT)

சிறுவாச்சூர் ஊர்சுத்தியான் பெரியசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், ஊர்சுத்தியான் பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆடி மாத சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று கோவிலில் ஊர்சுத்தியான் பெரியசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபட்டனர். இதில் சிறுவாச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story