மேலூரில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் நகை பறிப்பு
மேலூரில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை அணிந்திருந்த நகையை 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலூர்,
மேலூர் கோமதியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி ராணி(வயது 50). இவர் அ.வல்லாளபட்டி அருகே சண்முகநாதபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 3 மணி அளவில் ராணி வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்குள் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களில் ஒருவர், ராணியிடம் சென்று வகுப்பறையில் ஒரு மாணவியின் பெயரை அழைத்து, அவர் இருக்கிறாரா என்று கேட்டுள்ளனர். அப்படி யாரும் இல்லை என்று ராணி திரும்பியபோது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை அந்த வாலிபர் பறித்தார். அப்போது சுதாரித்துக்கொண்ட ஆசிரியை தனது நகையை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் அந்த நகை இரண்டாக அறுந்தது. அதில் 2¾ பவுன் நகை வாலிபர் கையில் சிக்கியது. மீதி 4¼ பவுன் நகை ஆசிரியை கையில் இருந்தது.
உடனே அந்த வாலிபர் கிடைத்த நகையுடன், ஏற்கனவே அங்கு காத்திருந்த உடன் வந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறி கண்இமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து ராணி உடனடியாக மேலவளவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் மேலூரில் உள்ள ஆசிரியைகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story