உளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - வியாபாரி பலி


உளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் -  வியாபாரி பலி
x
தினத்தந்தி 8 Aug 2019 4:00 AM IST (Updated: 8 Aug 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்தியராஜ்(வயது 35). பூண்டு வியாபாரி. இவர் நேற்று முன்தினம் மாலை சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் அஜிஸ் நகரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டார். திருச்சி சாலையில் சென்றபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சத்தியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சத்தியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story