ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடி ; பெண் கைது


ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 15 லட்சம் மோசடி ; பெண் கைது
x
தினத்தந்தி 7 Aug 2019 10:15 PM GMT (Updated: 7 Aug 2019 8:30 PM GMT)

ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சேலத்தை சேர்ந்தவரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கிழக்கு ராஜாராம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 33). இவரிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூரை சேர்ந்த ரஜினிகாந்த், அவரது மனைவி சுவர்ணலட்சுமி (44), பவுன்குமார் ஆகியோர் ஓசூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து லட்சுமணன் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப தர மறுத்ததுடன், லட்சுமணனுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இது தொடர்பாக லட்சுமணன் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத் பாஷா வழக்குப்பதிவு செய்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக சுவர்ணலட்சுமியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story