தார்சாலையில் கொட்டப்பட்ட களிமண்ணை அகற்றக்கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்


தார்சாலையில் கொட்டப்பட்ட களிமண்ணை அகற்றக்கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 8:30 PM GMT)

அதியமான்கோட்டை, கோடியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கரை மீது தார்சாலையில் கொட்டப்பட்டுள்ள களிமண்ணை அகற்றக்கோரி நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள சோழராயன் ஏரியில் ரூ.48 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏரியில் இருந்து களிமண்ணை அள்ளி வந்து கரையில் உள்ள அதியமான்கோட்டை-கோடியூர் செல்லும் தார்சாலையில் கொட்டி வைத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து செல்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அதியமான்கோட்டை, கோடியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கரை மீது தார்சாலையில் கொட்டப்பட்டுள்ள களிமண்ணை அகற்றக்கோரி நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story