கருங்கலில் ரேஷன் கடை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கருங்கலில் ரேஷன் கடை முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருங்கல்,
ரேஷன் கடைகளில் அரிசியின் அளவு தற்போது குறைவாக வினியோகம் செய்யப்படுகிறது. இதை கண்டித்து குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று கருங்கலில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட மகிளா காங்கிரஸ் ஷர்மிளா ஏஞ்சல், நகர தலைவர் பிரேம் சிங், இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் ராஜேஷ், சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜகிளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திற்பரப்பு
திற்பரப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பத்மநாபபுரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரூபன்ராஜ் தலைமை தாங்கினார். இதுபோல், முளவிளை, வெள்ளிகோடு, சந்தவிளை, காஞ்சாம்புறம் உள்பட பல இடங்களில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story