அனுமதி இன்றி பதுக்கிய ரூ.2 கோடி தேக்கு மர பலகைகள் பறிமுதல்-லாரி டிரைவர் கைது


அனுமதி இன்றி பதுக்கிய ரூ.2 கோடி தேக்கு மர பலகைகள் பறிமுதல்-லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2019 4:45 AM IST (Updated: 9 Aug 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே உரிய அனுமதி இன்றி பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான தேக்கு மர பலகைகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக லாரி டிரைவரை கைது செய்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் அருகே உள்ள ஒரு மைதானத்தில் லாரியில் இருந்து தேக்கு மர பலகைகளை இறக்கி வைக்கப்படுவதாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐவஹர் பீட்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பலராமன், சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அங்கு அசாம் மாநிலம் மோரே பகுதியில் இருந்து லாரியில் தேக்கு மர பலகைகளை கடத்தி வந்து உரிய அனுமதி இல்லாமல் மைதானத்தில் அடுக்கி வைக்கப்பட்டு அதன் மீது தார்ப்பாய் கொண்டு மூடி மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

விசாரணையில் அவை, செங்குன்றத்தை அடுத்த சோழவரத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானவை என்பதும், அசாம் மாநிலத்தில் இருந்து அந்த தேக்கு மர பலகைகளை லாரியில் கடத்திவந்து உரிய அனுமதி இன்றி இங்கு பதுக்கி வைக்கப்பட்டு, இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முயன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் துரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான அண்ணாதுரை (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கு பதுக்கி வைத்து இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தேக்கு மர பலகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story