பெரம்பலூர் ஓட்டலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
புதுச்சேரி மாநிலம் தட்டான்சாவடி சொக்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் பார்த்தசாரதி(வயது 37). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பழைய கார்களை வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். பார்த்தசாரதி கடந்த 2-ந் தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபலமான ஒரு ஓட்டலில் குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) அறையை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மறுநாள் வெளியே சென்று விட்டு, மீண்டும் இரவில் அறைக்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வரை பார்த்தசாரதி தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. மேலும் அந்த அறையை சுற்றி துர்நாற்றம் வீச தொடங்கியது.
இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓட்டலுக்கு வந்த போலீசார் பார்த்தசாரதி தங்கி இருந்த அறையின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது அறையின் மின்விசிறியில் பார்த்தசாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அந்த அறையில் மது பாட்டில்கள் கிடந்தது. இதையடுத்து பார்த்தசாரதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் பார்த்தசாரதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொழிலில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்தசாரதி பெரம்பலூர் வந்தால் அந்த ஓட்டலில் தான் அறை எடுத்து தங்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story