ஆடி திருவிழாவையொட்டி கல்யாணராமன் சுவாமி கோவில் தேரோட்டம்
மீமிசலில் ஆடி திருவிழாவையொட்டி கல்யாணராமன் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் கல்யாணராமன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று முதல் தினந்தோறும் கல்யாண ராமன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கல்யாணராமன் சுவாமிக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையாக வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கல்யாணராமன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால்யாணராமன் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார்.
தேரோட்டம்
இதைதொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் ஒவ்வொரு வீதியிலும் குவிந்து நின்று தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமியை வழிப்பட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீமிசல் மற்றும் சத்திரப்பட்டினம் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story