ஆவணி திருவிழா ஆலோசனை கூட்டம்: நாகராஜா கோவிலில் பொதுமக்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க கூடாது
நாகராஜா கோவில் ஆவணி திருவிழா ஆலோசனை கூட்டத்தில் “பொதுமக்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க கூடாது“ என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற உள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதையொட்டி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் நேற்று நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேசும் போது கூறியதாவது:-
நாகராஜா கோவிலில் ஆவணி மாதம் நடைபெறவுள்ள திருவிழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து பஸ் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
தற்காலிக கடைகள்
மேலும் கோவில் வளாகத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்து, கோவிலில் உள்ள கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஆங்காங்கே தற்காலிக கழிவறைகளும் அமைக்க வேண்டும். கோவிலுக்கு பயன்படுத்தும் பூஜை பொருட்களான பால், மஞ்சள் போன்றவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும். கோவிலில் இருந்து வெளியேறும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கோவிலுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக கோவிலை சுற்றியுள்ள காலியான இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்ககூடாது. இதற்கான பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு தளவாய் சுந்தரம் கூறினார்.
கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இணை ஆணையர்(இந்து அறநிலையத்துறை) அன்புமணி, போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story