ஏரி, குளங்களை தூர்வாருவதில் மக்களின் பங்களிப்பு அவசியம் நீர் மேலாண்மை ஆய்வுக்குழு தலைவர் பேட்டி
ஏரி, குளங்களை தூர்வாருவதில் மக்களின் பங்களிப்பு அவசியம் என்று சேலத்தில் நீர் மேலாண்மை ஆய்வுக்குழு தலைவர் திருப்புகழ் கூறினார்.
சேலம்,
நாடு முழுவதும் நீர் மேலாண்மை மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான ஜல் சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ஆய்வு செய்து நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் திட்ட இணை செயலாளர் திருப்புகழ் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கடந்த மாதம் முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டு முடித்த நிலையில் நேற்று 2-ம் கட்ட ஆய்வு செய்வதற்காக சேலம் வந்தனர்.
இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து அனைத்து துறை தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கான பயிற்சி சேலத்தில் நேற்று நடந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் திட்ட இணை செயலாளரும், மாவட்ட நீர் மேலாண்மை ஆய்வுக்குழு தலைவருமான திருப்புகழ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராமன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மத்திய குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ஞானசுந்தரம் உள்பட பலர் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பேட்டி
முடிவில், நீர் மேலாண்மை ஆய்வுக்குழு தலைவர் திருப்புகழ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜல் சக்தி அபியான் என்பது நீர் சேமிப்பு தொடர்பாக மக்கள் இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம். பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீர் சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், ஏரி, குளங்களை தூர்வாருவதிலும் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஏனென்றால் அரசால் மட்டுமே அனைத்தையும் செய்துவிட முடியாது. மக்களின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
நீரை சேமிப்பதற்கு
பொதுமக்கள் அவரவர் வீட்டில் குளிப்பது மற்றும் துணி துவைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய நீரை வீணாக்காமல் அதை தோட்டப்பயிர்களுக்கோ? அல்லது காய்கறி பயிர்களுக்கோ? பயன்படுத்தும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மழைநீரை சேமிப்பது பற்றி அரசு அலுவலர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்குவார்கள். எங்களது முதற்கட்ட ஆய்வில் மாவட்டம் முழுவதும் நீர் சேமிப்பிற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு சில குறைகள் இருப்பதை அதிகாரிகள் சரி செய்ய அறிவுரை வழங்கியுள்ளோம். ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில் பார்க்க முடியவில்லை.
தற்போது மழை பெய்து வருவதால் இந்த நீரை சேமிப்பதற்கு மண் உகந்ததா? என்பதை பார்த்து அதற்கு எத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும் என்பதை வல்லுனர்கள் மூலம் அறிவுறுத்த உள்ளோம். நீர் வழித்தடம், ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story