பிளாஸ்டிக் கவரை முகத்தில் கட்டிக் கொண்டு தமிழக கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை


பிளாஸ்டிக் கவரை முகத்தில் கட்டிக் கொண்டு தமிழக கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2019 4:20 AM IST (Updated: 9 Aug 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பிளாஸ்டிக் கவரை முகத்தில் கட்டிக் கொண்டு தமிழக கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் பன்னரகட்டா அருகே காலேன அக்ரஹாரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக் (வயது 35). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கார்த்திக்கின் சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். அவர் தனது மனைவியுடன் கடந்த பல ஆண்டுகளாக காலேன அக்ரஹாராவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை உட்புறமாக கார்த்திக் பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. கதவை திறக்கும்படி கார்த்திக்கிடம், அவரது மனைவி கூறியும், கதவை திறக்கவில்லை. இதையடுத்து, மாற்று சாவி மூலமாக கதவை திறந்து கார்த்திக்கின் மனைவி உள்ளே சென்றார். அப்போது கார்த்திக் பிணமாக கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது பிளாஸ்டிக் கவரை முகத்தில் கட்டிக் கொண்டும், அந்த கவர் மீது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் வயரை கழுத்தில் கட்டிக் கொண்டும் கார்த்திக் தற்கொலை செய்திருந்தார். இதுபற்றி அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது உடல் நலக் குறைவு காரணமாக கார்த்திக் அவதிப்பட்டு வந்ததும், இதனால் மனம் உடைந்த அவர் பிளாஸ்டிக் கவரை தலையில் கட்டிக் கொண்டு உயிரை மாய்த்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story