பாங்காக்கில் இருந்து விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.3¼ கோடி தங்கம் பறிமுதல் 3 பேர் கைது
பாங்காக்கில் இருந்து விமானத்தில் ரூ.3¼ கோடி தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சம்பவத்தன்று மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது 3 பயணிகளின் உடைமைகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், தங்கம் கடத்தி வந்தது டெல்லியை சேர்ந்த ஆசிஸ் கான், தாய்லாந்தை சேர்ந்த மெதாவி, ரட்சபோன் என்பது தெரியவந்தது.
ரூ.3¼ கோடி தங்கம்
இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் உடைமைகளில் இருந்து 6 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 25 லட்சம் ஆகும்.
பிடிப்பட்ட 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்கள் யாருக்காக தங்க கடத்தலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story