நகராட்சி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தாமதமாகும் நிலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவகங்கை நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க தாமதமாகும் நிலை உள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கை நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு மாதமும் 31-ந் தேதியில் இருந்து மறுமாதம் 2-ந் தேதிக்குள் ஓய்வூதிய தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகை இதுவரை வழங்கப்படவில்லையாம். இதனால் ஓய்வூதியர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலசுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது:-
சிவகங்கை நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களில் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட சுமார் 100 பேர் வரை தற்போது உள்ளனர். வயதான நிலையில் உள்ள இவர்கள் தங்களுக்கு வரக்கூடிய ஓய்வூதிய பணத்தை மட்டும் நம்பி குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை அலுவலகத்தில் இருந்து ஓய்வூதியம் அனுப்பப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு மாதமும் 31-ந்தேதியே ஓய்வூதிய தொகை ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அந்த பணம் மறு மாதம் 2-ந்தேதி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதத்திற்குரிய ஓய்வூதிய தொகை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கு இந்த ஓய்வூதிய தொகை அந்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்டு விட்டது. அரசு வழங்கும் ஓய்வூதிய தொகையை நம்பி ஓய்வு பெற்ற என்னை போன்ற ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மாநிலம் முழுவதும் இந்த ஓய்வூதிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. மேலும் இந்த தொகை வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்றும், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
எனவே தமிழக அரசு உடனடியாக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story