திருவண்ணாமலை மாவட்டத்தில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர்தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற பொது மக்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் ஒரே மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இணையதளம் மூலம் கட்டணமின்றி எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ், குழந்தையின் முதல் உரிமை. எனவே, பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்லும் போது, கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து பெற்ற பிரத்யேக 12 இலக்க பேறுசார் மற்றும் குழந்தை நல அடையாள எண், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய விவரங்களை அளித்தல் வேண்டும்.
அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பிறப்பு, இறப்பு நிகழ்வு குறித்த தகவல்கள் அளித்திட ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனிப்பட்ட ‘பயனர் ஐடி’ கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவை சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மேலும் அரசு மருத்துவமனையில் நிகழக்கூடிய பிரசவங்களுக்கு அக்குழந்தையின் தாய் மருத்துவமனையை விட்டுச் செல்லும் முன் பிறப்பு சான்றிதழ் வழங்கிட அந்த மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்துள்ள மையங்களில் பிறப்பு, இறப்பு பதிவாளர் இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் நிகழும் பிறப்பு மற்றும் இறப்புகள் குறித்த தகவல்களை அப்பகுதிக்கு உட்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து பதிவு மேற்கொள்ளலாம்.
கட்டணமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரி http://crstn.org . அதிலுள்ள ‘க்யூ ஆர்’ கோடு சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் crstn.brg என்ற மென்பொருளில் பதிவு செய்யப்பட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும். எனவே பொது மக்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story