நாகையில், ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகையில், ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2019 4:15 AM IST (Updated: 10 Aug 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அவுரித்திடலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிர் அணி செயலாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மதன்ராஜ், பொருளாளர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்டா மண்டல தலைவர் கவிச்செல்வன் வரவேற்றார். மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் கலந்துகொண்டு பேசினார்.

கஜாபுயல் மீட்பு பணியின் போது ஊராட்சி செயலாளர்கள் மேல் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின்படி தங்களது சொந்த நிதியில் இருந்து செலவு செய்த தொகை இது நாள் வரை வழங்கப்படவில்லை. இந்த பேரிடர் கால மீட்பு பணி தொகையை ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், மாநில பொருளாளர் மகேஸ்வரன், மாநில அமைப்புச் செயலாளர் செங்கதிர் செல்வன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story