தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
திருவாரூரில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
திருவாரூர்,
திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 51 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வி தகுதிக்கு ஏற்ப வேலைக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தனர். படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் என 1,206 பேர் முகாமில் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 690 பேர் தேர்வானார்கள். அவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.
இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைசெல்வன், தாசில்தார் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story