திண்டுக்கல்லில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு, ஜி.பி.எஸ். கருவி பொருத்திய லாரியில் செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள்
திண்டுக்கல்லில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்திய லாரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
திண்டுக்கல்,
மராட்டிய மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்களுடன், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக வழக்கு தொடரப்படாத தொகுதிகளில் இருந்து எந்திரங்களை மராட்டியத்துக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் ஒருசில நாடாளுமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை, மராட்டிய மாநிலத்துக்கு அனுப்பும் பணி நடக்கிறது.
அதன்படி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரங்கள், மராட்டிய மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 750 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 2 ஆயிரத்து 350 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2 ஆயிரத்து 350 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை லாரி மூலம் மராட்டிய மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன.
இதையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட லாரியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புக்காக சென்றுள்ளனர். மேலும் லாரி செல்லும் பாதையை கண்காணிக்கும் வகையில் அதில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story