மாவட்ட செய்திகள்

காரில் கடத்தப்பட்ட 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது + "||" + Youth arrested for confiscating 1,536 bars

காரில் கடத்தப்பட்ட 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது

காரில் கடத்தப்பட்ட 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
குத்தாலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குத்தாலம்,

குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கத்தரிமூலை கிராமம் பொறையாறு-ஆடுதுறை சாலையில் நேற்று மயிலாடுதுறை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஏராளமான அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.


இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் மதுபாட்டில்களை கடத்தி வந்தது காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் அற்புதராஜ் (வயது 33) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,536 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
2. சுதந்திரதினத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு படையினர் சோதனை
தஞ்சையில், சுதந்திரதினத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற் கொண்டனர்.
3. நாகர்கோவிலில் அதிகாரிகள் சோதனை: ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. இடைத்தரகர்கள் மூலம் பணம் வாங்குவதாக புகார், விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
இடைத்தரகர்கள் மூலம் பணம் வாங்குவதாக எழுந்த புகாரின் பேரில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2½ லட்சம் சிக்கியது.
5. தஞ்சை, சேதுபாவாசத்திரத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தஞ்சை, சேதுபாவாசத்திரத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.