அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்


அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Aug 2019 3:45 AM IST (Updated: 11 Aug 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா அன்னையின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாங்கண்ணி ஓட்டல் உரிமையாளர் சங்கம் சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் வில்சன், செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உணவை கையாள்பவர்கள் அனைவரும் மருத்துவ சான்று பெற வேண்டும். பதிவு உரிமம் பெறாதவர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டலுக்கும் தனித்தனியாக ஒரு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்க வேண்டும்.

அனுமதி

குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் தவறாது உணவு பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய உரிமம் அல்லது பதிவு இல்லாத உணவு வணிகர்களிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, அவர்களுக்கு விற்பனை செய்யவோ கூடாது ஆகியவை குறித்து ஓட்டல் உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இதில் கீழையூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அந்தோணிபிரபு உள்பட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

Next Story