மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் மீட்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் + "||" + Nilgiris district, 15 thousand people were recovery affected by the floods

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் மீட்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் மீட்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,

மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நான் உள்பட அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தோம். மழை தற்போது குறைந்து வருவதால் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.


நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாக்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 155 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இது வரை 55 முகாம்களில் 3500-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமல்லாது மிகவும் தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் உள்ளவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

கனமழையால் இறந்த நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அவலாஞ்சியில் அதிக அளவு மழை பெய்துள்ளதை தொடர்ந்து அந்த பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்த மின்நிலையம் பாதிப்படைந்துள்ளது. அதை சரி செய்யும் பணியும் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கனமழை - வெள்ளத்திற்கு நாடுமுழுவதும் 500 பேர் பலி; பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு
இன்று புதன்கிழமை வரை இந்தியா முழுவதும் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
2. திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ரூ 10 கோடி வெள்ள நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும்: ஸ்டாலின்
வெள்ள நிவாரணப்பணிகளை அரசு முடுக்கி விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
4. நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
5. நீலகிரி, ஊட்டி பகுதிகளில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - நீர்மட்டம் 68.05 அடியாக உயர்வு
நீலகிரி, ஊட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 68.05 அடியாக உள்ளது.