மாவட்ட செய்திகள்

கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: தங்கை இறந்ததால் விபரீத முடிவு + "||" + Jumping into the well The woman committed suicide

கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: தங்கை இறந்ததால் விபரீத முடிவு

கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: தங்கை இறந்ததால் விபரீத முடிவு
சேலத்தில் கணவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்ததால் அவர் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சூரமங்கலம்,

சேலம் காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. லாரி டிரைவர். இவருடைய மனைவி சாந்தி (வயது 33). நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர் காலையில் ராஜா எழுந்து பார்த்தபோது, திடீரென அவரது மனைவி சாந்தி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர், வெளியே வர முயன்றபோது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டிற்குள் இருந்தபடி ராஜா, சத்தம் போட்டு கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பிறகு அவர்களின் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த அவர், பல்வேறு இடங்களில் சாந்தியை தேடியும் கிடைக்கவில்லை.


இந்தநிலையில், சேலம்-ஓமலூர் மெயின்ரோடு முத்துநாயக்கன்பட்டி செல்லும் வழியில் காசிலிங்கம் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்த அவர், கிணற்றில் எட்டிபார்த்தபோது, ஒரு பெண் இறந்த நிலையில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கிணற்றின் அருகில் ரத்தக்கறை ஆங்காங்கே படிந்திருந்தது.

இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதேசமயம், அந்த பெண்ணை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியிருக்கலாம் என்ற தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. அப்போது, அவரின் கை நரம்பு அறுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் மாயமான ராஜாவின் மனைவி சாந்தி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து காமநாயக்கன்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

அப்போது, இறந்த சாந்திக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றதும், அதன்பிறகு 2-வதாக ராஜா என்பவரை திருமணம் செய்திருந்ததும் தெரியவந்தது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. சாந்தியின் தங்கை லதாவும் அவருடன் வசித்து வந்தார். லதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகவும், ஆனால் திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்தநிலையில் கடந்த மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனால் தங்கை இறந்தபோன சோகத்தில் சாந்தி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கணவர் தூங்கிய பிறகு கடிதம் ஒன்றை சாந்தி எழுதியுள்ளார். அதில், என்னை மன்னித்து விடுங்கள். என்னால் லதா இல்லாமல் வாழமுடியவில்லை. தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்னுடைய கணவர் மறுமணம் செய்து கொள்ள வேண்டும், என்று சாந்தி கடிதத்தில் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் கடிதம் எழுதி வைத்து வந்த சாந்தி, வீட்டுக்குள் கணவரை வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் சிறிது தூரம் நடந்து சென்ற அவர், பிளேடால் கையை அறுத்துக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தங்கை இறந்ததால் விபரீத முடிவு எடுத்து பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எறும்பு பவுடரை தின்று பெண் தற்கொலை
வீரபாண்டி அருகே, எறும்பு பவுடரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
2. வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
3. 2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில், 2 வயது மகனை கொன்றுவிட்டு, பெண் தூக்குப்போட்டு தற்கொலை
2-வது கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது மகனை கொன்றுவிட்டு தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
4. மதுரவாயலில் பெண் தற்கொலை போலீசுக்கு தெரியாமல் உடலை திண்டிவனம் கொண்டு சென்ற கணவர்
மதுரவாயலில் குடும்பத்தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய திண்டிவனம் கொண்டு சென்ற உடலை போலீசார் மீட்டு, அவரது கணவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
5. பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை செய்ததாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை