மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் 4 மையங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு + "||" + Competitive Examination for Integrated Engineering Works in 4 Centers in Nagercoil

நாகர்கோவிலில் 4 மையங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு

நாகர்கோவிலில் 4 மையங்களில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
நாகர்கோவில்,

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வுக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 2,591 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 தேர்வு கூடங்களும், டி.வி.டி. பள்ளியில் 2 தேர்வு கூடங்களும், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் 2 தேர்வு கூடங்களும், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் 3 தேர்வு கூடங்களும் ஆக மொத்தம் 4 மையங்களில் 9 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.


தேர்வர்களுக்கு காலை, பிற்பகல் என இரு தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வெழுத விண்ணப்பித்திருந்த 2,591 பேரில் காலையில் 1,712 பேர் தேர்வு எழுதினர். 879 பேர் வரவில்லை. பிற்பகலில் 1,703 பேர் தேர்வு எழுதினர். 888 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் சிவகலா மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் செய்திருந்தனர்.