கடலூரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி தொடங்கியது


கடலூரில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி தொடங்கியது
x
தினத்தந்தி 11 Aug 2019 3:12 AM IST (Updated: 11 Aug 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான மல்யுத்த போட்டி கடலூரில் நேற்று தொடங்கியது.

கடலூர்,

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு, மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதற்கு டாக்டர் சுரேந்திரகுமார் தலைமை தாங்கினார். தென் இந்திய மல்யுத்த சங்க இணைசெயலாளர் லோகநாதன் வரவேற்றார். இந்திய கப்பற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் கவுஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் எடை அளவை கொண்டு ஆண்களுக்கு 20 பிரிவுகள், பெண்களுக்கு 10 பிரிவுகள் என மொத்தம் 30 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம், ஈரோடு, நாமக்கல், சென்னை, கடலூர் என மொத்தம் 19 மாவட்டங்களை சேர்ந்த 170 பேர் கலந்துகொண்டனர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட மல்யுத்த அணி வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கடலூர் மாவட்ட மல்யுத்த சங்க பொதுச் செயலாளர் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.

போட்டிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

Next Story