கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் முட்புதருக்குள் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை-தாய்க்கு போலீஸ் வலைவீச்சு
கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் பைக்குள் வைத்து பச்சிளம் பெண் குழந்தையை முட்புதருக்குள் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பாக்கியவதி(வயது 43). இவர், ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வரும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை 1 மணியளவில் ஸ்கூட்டரில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஆலமரத்தின் அருகே இருந்த முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகை சத்தம்கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அதில் முட்புதருக்குள் கட்டைப்பை ஒன்று இருந்தது. மேலும் அந்த பைக்குள், பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது. இதையடுத்து அந்த குழந்தையை பையில் வைத்து ஸ்கூட்டரில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்களிடம் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் முட்புதருக்குள் கட்டைப்பையில் பச்சிளம் குழந்தை கிடந்ததாகவும், யாரும் இல்லாததால் அந்த குழந்தையை காப்பாற்றும் வகையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து குழந்தையின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். எடை குறைவாக இருந்ததால் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது இந்த பெண் குழந்தை, தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பைக்குள் பச்சிளம் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது குறித்து கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பெண் குழந்தை என்பதால் அதன் தாய் குழந்தையை முட்புதருக்குள் வைத்துவிட்டு சென்றாரா? அல்லது கள்ளத் தொடர்பில் பிறந்ததால் முட்புதரில் வைத்து சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story