பால்கரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
பால்கரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
வசாய்,
பால்கர் மோகாடா பகுதியை சேர்ந்த சிறுவன் அர்சன் அக்லக் ஷேக் (வயது 7). சிறுவனின் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர். இந்தநிலையில் சம்பவத் தன்று அர்சன்அக்லக் ஷேக் உறவினரின் மகன் பர்கான்சகிர் காதிக் (7) என்பவருடன் விளையாட வெளியே சென்றிருந்தான்.
அப்போது அந்த பகுதி யில் உள்ள குளத்திற்கு அருகே விளையாடி கொண்டிருந்த போது இருவரும் குளத்தில் விழுந்தனர். இதில் சிறுவர்கள் குளத்தில் மூழ்கினர்.
பரிதாப சாவு
விளையாட சென்ற சிறுவர்கள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் கலக்கம் அடைந்தனர். சிறுவர்களை அக்கம்பக்கத்தில் தேடி பார்த்த போது இருவரும் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. தகவலறிந்து அப்பகுதி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அவர்கள் சிறுவர்களை பிணமாக மீட்டனர்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விளையாட சென்ற சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தது அப்பகுதியினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story