மாவட்ட செய்திகள்

மரக்காணத்தை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + From marakkanattai On the famous Rowdy The thug act went down

மரக்காணத்தை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மரக்காணத்தை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மரக்காணத்தை சேர்ந்த பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,

மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜனா (வயது 21). பிரபல ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அடிதடி, தகராறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்துக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஜனாவை, மரக்காணம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்அடிப்படையில் ஜனாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு, கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜனாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.