தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது


தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 12 Aug 2019 4:30 AM IST (Updated: 12 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டி உள்ளது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த அணையின் தண்ணீர் மூலம் ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 372 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 87.39 அடியாக இருந்தது.

நேற்று காலை 8 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 538 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 90.12 அடியாக இருந்தது. மதியம் 12 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 283 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 90.59 அடியாக இருந்தது.

அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக முதல் கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story