மாவட்ட செய்திகள்

மும்பை ஓட்டலில் வேகவைத்த 2 முட்டையின் விலை ரூ.1,700 + "||" + In Mumbai hotel 2 boiled egg for Rs 1,700

மும்பை ஓட்டலில் வேகவைத்த 2 முட்டையின் விலை ரூ.1,700

மும்பை ஓட்டலில் வேகவைத்த 2 முட்டையின் விலை ரூ.1,700
மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் வேகவைத்த 2 முட்டைக்கு ரூ.1,700 வசூலிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
மும்பை,

விஸ்வரூபம் படத்தில் வில்லனாக வந்த பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2 வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டதற்காக ரூ.442 பில் கட்டியதை டுவிட்டரில் வெளியிட்டார்.


இதனையடுத்து ஓட்டலுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. வாழைப்பழத்திற்கு ஜி.எஸ்.டி.யும் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜே. டபிள்யூ மேரியட் ஓட்டலுக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

2 வாழைப்பழத்திற்கு ரூ.442 வசூலிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதையும் மிஞ்சும் வகையில் மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் 2 வேகவைத்த முட்டைக்கு ரூ.1,700 வசூலிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மும்பையில் உள்ள ‘போர் சீசன்' என்ற ஓட்டலில் தான், வேக வைத்த முட்டைக்கு இவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து அந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிட்ட கார்த்திக் தார் என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஓட்டலில் கட்டிய பில்லை வெளியிட்டு இருக்கிறார். அவர் நடிகர் ராகுல் போசிடம் நாம் போராட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை சிலர் விமர்சித்து பதிவு செய்தாலும், மேலும் சிலர், அதிகமாக கட்டணம் உள்ளது என்று தெரிந்தும் ஏன் அங்கு செல்கிறீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.