தூத்துக்குடியில் பரபரப்பு மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிப்பு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி எஸ்.எம்.புரம் 1-வது தெருவில் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த மோட்டார் சைக்கிள் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என்பது தெரியவில்லை. இதனால் யாராவது மோட்டார் சைக்கிளை கடத்தி வந்து எஸ்.எம்.புரத்தில் வைத்து தீவைத்து எரித்து விட்டார்களா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா, மோட்டார் சைக்கிள் உரிமையாளர் யார்? என்பது குறித்து தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story