குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 12 Aug 2019 4:30 AM IST (Updated: 12 Aug 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் பெய்வதால் ஆறுகள் மற்றும் கால்வாய் களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதே போல நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் மழை பெய்தது. நாகர் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. பகல் 12 மணி அளவில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

அதே சமயம் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், சுருளோடு மற்றும் பாலமோர் உள்ளிட்ட மலையோர பகுதி களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

மழை அளவு

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-21, பூதப் பாண்டி-20.4, சுருளோடு-31.2, கன்னிமார்-21.4, ஆரல்வாய் மொழி-5.2, பாலமோர்-18.2, மயிலாடி-13.8, கொட்டா ரம்-11, ஆனைகிடங்கு-8, குருந் தன்கோடு-11.2, அடையா மடை-14, கோழிப்போர் விளை-25, முள்ளங்கினா விளை-18, புத்தன்அணை-18, திற்பரப்பு-54.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதே போல அணைப் பகுதிகளில் பேச்சிப் பாறை-17.4, பெருஞ்சாணி- 29.4, சிற்றார் 1-29, சிற்றார் 2-17.4, மாம்பழத்துறை யாறு-21, முக்கடல்-26.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணைகளுக்கு நீர்வரத்து

மழை தொடர்ந்து பெய்வதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. நேற்று மழை அளவு சற்று குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து தற்போது குறைந்து உள்ளது. அதாவது பேச்சிப் பாறை அணைக்கு நேற்று முன்தினம் 1,702 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து குறைந்து 1,160 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் பேச்சிப்பாறை அணைக்கு 3 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல 1,557 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 1,198 கனஅடி தண்ணீர் வருகிறது. மேலும் சிற்றார் 1 அணைக்கு 187 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 279 கனஅடியும், பொய்கை அணைக்கு 2 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 23 கனஅடியும் தண்ணீர் வந்தது. நீர்வரத்து குறைந்து இருந்தாலும் போதுமான அளவு தண்ணீர் வருவதால் அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது. அதே சமயத்தில் மழை காரணமாக ஏராளமான குளங்கள் நிறைந்துள்ளன. மேலும் பல குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வெள்ளப்பெருக்கு

ஆறுகளில் வெள்ளப்பெருக் கும் ஏற்பட்டு உள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற் றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல மக்கள் கடும் அவதிப்படுகின் றனர். இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல பரளியாறு, வள்ளியாறு உள் ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் திற்பரப்பு அருவியில் நேற்று அலைமோதியது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அரு வியில் குளித்து மகிழ்ந்தனர். இதுபோக அனந்தனார் கால்வாய், தோவாளை கால்வாய், வெள்ளமடம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களிலும் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.

நாகர்கோவில் பழையாற்றில் உள்ள தடுப்பணைகளில் மறுகால் பாய்கிறது. இதில் சபரி தடுப்பணையில் இருந்து மட்டும் பறக்கை பெரியகுளம் உள்பட 3 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதே போல குமரி அணை மற்றும் சோழன் திட்டை ஆகிய தடுப்பு அணைகளில் இருந்தும் குளங்களுக்கு தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

தொடர் மழை காரணமாக புத்தேரி, இறச்சகுளம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதே போல தாழ்வாக உள்ள பல இடங்களில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் பல இடங்களில் மழை நீருடன் சாக்கடையும் கலந்து செல்வ தால் துர்நாற்றம் வீசுகிறது. அதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது.

மழை பெய்யும்போது பலத்த காற்றும் வீசுவதால் பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. மேலும் ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்களும், அதை மின் வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் செண்பக ராமன் புதூரை அடுத்த கண்ணன் புதூர் பூங்காவில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். சாய்ந்த மரத்தை வெட்டி அகற்றும் பணி நடந்தது.

Next Story