சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன போராட்டம்


சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2019 4:15 AM IST (Updated: 12 Aug 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தடிக்காரன்கோணத்தில் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித படகு விடும் நூதன போராட்டம் நடந்தது.

அழகியபாண்டியபுரம்,

தடிக்காரன்கோணத்தில் இருந்து கீரிப்பாறைக்கு செல்லும் சாலை கடந்த 5 ஆண்டுகளாக பழுதடைந்து, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை நிதி ஒதுக்கியும், வனத்துறை அனுமதி வழங்க மறுத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, சாலையை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தடிக்காரன்கோணத்தில் சாலை பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித படகு விடும் நூதன போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜினோ தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணிகண்டன், மேரி ஜாய், பிலிப்ரோஸ், ராஜவேல், இம்மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story