மாவட்ட செய்திகள்

முகிலன்குடியிருப்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் + "||" + Tuesday morning pilgrimage to Mukhilangudi Pilgrims

முகிலன்குடியிருப்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம்

முகிலன்குடியிருப்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம்
தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பில், எட்டுக்கூட்டு தேரிவிளை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.
தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பில், எட்டுக்கூட்டு தேரிவிளை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சி கலச ஊர்வலம் நடந்தது.

இதனையொட்டி முகிலன் குடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோவிலில் காலை 10 மணிக்கு பூஜையும், தொடர்ந்து 12 மணிக்கு கஞ்சி கலச ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு முகிலன்குடியிருப்பு ஊர் தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். எட்டுக்கூட்டு தேரிவிளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.


நாகர்கோவில் முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தேங்காய்காரன் குடியிருப்பு வழியாக பகல் ஒரு மணி அளவில் எட்டுக்கூட்டு தேரிவிளையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற சக்தி பீடத்தை அடைந்தது. அங்கு பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முகிலன் குடியிருப்பு ஊர் செயலாளர் செல்லத்துரை, பொருளாளர் கிருஷ்ண கோபால், செல்ல சிவலிங்கம், முன்னாள் ஊர் தலைவர் தாணுமாலய பெருமாள், ராஜகோபால் மற்றும் ஊர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகையில், அரசு மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி கடையடைப்பு-ஊர்வலம்
நாகையில், அரசு மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி கடையடைப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது. இதற்காக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
2. மத்திய அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்: காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவையில் இன்று(புதன்கிழமை) மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில், மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம்
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பெரம்பலூரில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
4. பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூர் மாவட்ட பகுதிகள் மற்றும் பாடாலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
5. அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு: உணவு பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலம்
அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உணவு பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.