கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சீரமைத்தனர் + "||" + Kanniyakumari Bhagavathi Amman Temple Theppakkulam was renovated by People's Justice Party
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சீரமைத்தனர்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சீரமைத்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி வடக்குத்தெருவில் உள்ள பகவதிஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளால் புதர்மண்டி காணப்பட்டது. அதனை கன்னியாகுமரி நகர மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் முழுவதுமாக சீரமைத்தனர். இந்த பணியை குமரி மாவட்ட பொறுப்பாளர் சசி தொடங்கி வைத்தார். மேலும் அந்த பகுதியில் 60 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் நாராயணன், மணிகண்டன், மூர்த்தி சிவா, ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் இந்துக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மனு அளித்தனர்.
மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று நடந்தது.