மாவட்ட செய்திகள்

காதல் தோல்வியால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை + "||" + By the failure of love Private company employee Suicide

காதல் தோல்வியால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

காதல் தோல்வியால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
காதல் தோல்வியால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு ஜெய் மாருதி தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 25). இவர், கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

அதே நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணை, ரஞ்சித்குமார் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரது காதலை அந்த பெண் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ரஞ்சித்குமார் மனம் உடைந்து காணப்பட்டார்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்கச்சென்ற ரஞ்சித்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலையில் எழுந்துபார்த்த அவரது தந்தை ராஜா, தனது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புழல் போலீசார், தூக்கில் தொங்கிய ரஞ்சித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமார், ஒரு தலை காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை