மாவட்ட செய்திகள்

கடந்த மாதத்தை காட்டிலும் காய்கறி விலை 20 சதவீதம் வரை குறைந்தது அடுத்தவாரம் விலை அதிகரிக்க வாய்ப்பு + "||" + Vegetable prices Reduced to 20 percent Next week price increases

கடந்த மாதத்தை காட்டிலும் காய்கறி விலை 20 சதவீதம் வரை குறைந்தது அடுத்தவாரம் விலை அதிகரிக்க வாய்ப்பு

கடந்த மாதத்தை காட்டிலும் காய்கறி விலை 20 சதவீதம் வரை குறைந்தது அடுத்தவாரம் விலை அதிகரிக்க வாய்ப்பு
கடந்த மாதத்தை காட்டிலும் காய்கறி விலை 20 சதவீதம் வரை குறைந்து இருப்பதாகவும், அடுத்தவாரம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,

காய்கறி விளைச்சல் குறைவாக இருந்ததால் கடந்த மாதத்தில் அவற்றின் விலையும் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து இருந்தது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பச்சைப்பட்டாணி ரூ.130, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.50, தக்காளி ரூ.40, அவரைக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.60 என்ற நிலையில் விற்பனை ஆனது.


விளைச்சல் குறைந்து வரத்து இல்லாத காரணத்தினால் இந்த அளவுக்கு விலை உயர்ந்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காய்கறி விலை சற்று குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் கூறியதாவது:-

கடந்த மாதத்தில் காய்கறி விளைச்சல் குறைவால் நாளொன்றுக்கு 300 லாரிகளில் தான் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து இருந்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, கர்நாடகா, ஆந்திரா மற்றும் இதர பகுதிகளில் இருந்து காய்கறி வந்து கொண்டு இருக்கின்றன.

இதன் காரணமாக கடந்த மாதத்தை காட்டிலும் காய்கறி விலை 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. தற்போது கர்நாடக பகுதிகளில் நல்ல மழை பெய்து இருக்கிறது. இதனால் காய்கறி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரியிலும் கனமழை பெய்தது. அங்கு இருந்து வரும் கேரட், பீன்ஸ், பீட்ரூட் விளைச்சலும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் தாக்கம் அடுத்த வாரத்தில் தான் தெரியும். இதன் காரணத்தினாலும், முகூர்த்த நாட்கள் வர இருப்பதாலும் அடுத்த வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம்(ஒரு கிலோ) வருமாறு:-

பச்சை பட்டாணி - ரூ.70, பீன்ஸ் - ரூ.40 முதல் ரூ.50 வரை, அவரைக்காய் ரூ.30 முதல் ரூ.40 வரை, வெண்டைக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, கத்தரிக்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, தக்காளி - ரூ.20 முதல் ரூ.25 வரை, உருளைக்கிழங்கு - ரூ.15 முதல் ரூ.20 வரை, பல்லாரி - ரூ.15 முதல் ரூ.20 வரை, சாம்பார் வெங்காயம் - ரூ.40 முதல் ரூ.50 வரை, முருங்கைக்காய் - ரூ.20 முதல் ரூ.30 வரை, நூக்கல் - ரூ.20, கேரட் - ரூ.40 முதல் ரூ.50 வரை, முள்ளங்கி - ரூ.10 முதல் ரூ.15 வரை, சவ்சவ் - ரூ.20 முதல் ரூ.25 வரை, பீர்க்கங்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீட்ரூட் - ரூ.30 முதல் ரூ.40 வரை, மிளகாய் - ரூ.20, இஞ்சி - ரூ.100 முதல் ரூ.130 வரை, பாகற்காய் - ரூ.30, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.20 முதல் ரூ.25 வரை.

தொடர்புடைய செய்திகள்

1. வரத்து குறைவால் மும்பையில் காய்கறி விலை கிடு கிடு உயர்வு; பொதுமக்கள் கவலை
வரத்து குறைவால் மும்பையில் காய்கறி விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.
2. காய்கறி விலை கிடுகிடு உயர்வு: நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்
காய்கறி விலை கிடுகிடு உயர்வால், நெல்லை மார்க்கெட்டில் 1 கிலோ இஞ்சி 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.