மாவட்ட செய்திகள்

அத்திவரதர் பக்தர்களின் வசதிக்காக காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தகவல் + "||" + For the convenience of the athivaradar devotees For kanchipuram The movement of additional buses

அத்திவரதர் பக்தர்களின் வசதிக்காக காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தகவல்

அத்திவரதர் பக்தர்களின் வசதிக்காக காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் தகவல்
காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை,

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.


இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் அத்திவரதர் சுவாமியை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ஏதுவாக, தற்காலிகமாக ஓரிக்கை, முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமதுபேட்டை மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அருகில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையங்களை 12-ந் தேதியன்று (நேற்று) போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

அத்திவரதரை தரிசிக்க வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட உயர்மட்ட அலுவலர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன் அடிப்படையில், அத்திவரதர் தரிசனம் காண வருகை தரும் பொதுமக்களுக்கு ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாள்தோறும் காஞ்சீபுரத்திலிருந்து சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஆரணி ஆகிய 14 இடங்களுக்கு நாள்தோறும் 861 நடைகள் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், கடந்த 1-ந் தேதி முதல் 265 நடைகள் கூடுதலாகவும், 6-ந் தேதி முதல் 87 நடைகள் கூடுதலாகவும், அதன்படி தினமும் 1,213 நடைகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள், அத்திவரதரை தரிசிக்க ஏதுவாக நாள்தோறும் 70 சிறிய பஸ்கள் (ஸ்மால் பஸ்) இயக்கப்படுகின்றன.

இதுதவிர, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 5 பஸ் நிலையங்கள் மற்றும் காஞ்சீபுரம் மத்திய பஸ் நிலையத்தையும் இணைக்கின்ற வகையில் 20 சிறிய பஸ்கள் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் போதிய பணியாளர்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களை அத்திவரதர் தரிசனம் நிறைவடையும் வரையில் இந்த வசதிகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்தார்.
2. 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனநிலைக்கு சென்றார்
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனநிலைக்கு சென்றார்.
3. அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீரை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு - ஆட்சியர் பொன்னையா பேட்டி
இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.
5. அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்
அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க கோரிய மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடமுடியாது என கூறப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை