மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை + "||" + Special Prayer on School Days

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி தஞ்சையில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது.
தஞ்சாவூர்,

முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையானது தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பக்ரீத்பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து நகரங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.


தஞ்சை காந்திஜிசாலை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதே போல் தஞ்சை நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

வாழ்த்துக்களை பரிமாறினர்

இதே போல் தஞ்சை பெசன்ட் அரங்கத்திலும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சிறுவர், சிறுமிகளும் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், பெரியவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை: ரெயில், பஸ்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளதால் ரெயில், பஸ்களில் வெளியூருக்கு செல்வதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
2. தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் ஜவுளிக்கடைகளில் விற்பனை உச்சக்கட்டம் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் உச்சக்கட்ட விற்பனை நடந்தது. மாநகரில் நிலவிய கடுமையான போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
3. தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: நாமக்கல் கடைவீதியில் அலை மோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாமக்கல் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
4. பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகரில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் குவிந்தனர்.
5. தஞ்சையில், தீபாவளி விற்பனை களை கட்டியது கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
தஞ்சையில் தீபாவளி விற்பனை களை கட்டியதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.