பள்ளிப்பட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்


பள்ளிப்பட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:15 PM GMT (Updated: 12 Aug 2019 8:03 PM GMT)

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று பக்ரீத் பெருநாளை முன்னிட்டு புத்தாடை அணிந்து பள்ளிப்பட்டு பேரித் தெருவில் இருக்கும் ஜும்மா மசூதிக்கு திரளாக சென்றனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ்நிலையம், சித்தூர் ரோடு வழியாக ஈத்கா மைதானம் சென்று அடைந்தனர். அங்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில், பள்ளிப்பட்டு, வெளிகரம், கத்தரிபள்ளி, கிருஷ்ணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் இவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் ஆடுகளை குர்பானி கொடுத்து இறைச்சியை மூன்று பங்காக பிரித்து ஒரு பங்கை தங்களுக்கும், ஒரு பங்கை உறவினர் மற்றும் நண்பர்களுக்கும், மூன்றாவது பங்கை ஏழைகளுக்கும் தானமாக வழங்கினர். பள்ளிப்பட்டு தாலுகாவில் கொளத்தூர், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றன.

Next Story