மாவட்ட செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி + "||" + At the Vandalur Zoo The school student Painting Competition for Students

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.
வண்டலூர்,

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உலக சிங்கங்கள் மற்றும் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கடந்த 8-ந்தேதி பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர் மற்றும்


காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

போட்டியின் முடிவில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பூங்காவில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கால்நடை மருத்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடயே யானைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவை கூடுதல் இயக்குனர் டாக்டர் என்.எஸ்.மனோகரன் மற்றும் பூங்கா உதவி இயக்குனர், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், வனச்சரக அலுவலர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வேலூரில் தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
2. ஆசிரியர்கள் வராததை கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கோத்தகிரி அருகே ஆசிரியர்கள் வராததை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
3. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம் - மத்திய மந்திரி பரிந்துரை
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம் ஆக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
4. கோலிக்கு மண்ணை அனுப்பி ஆசீர்வதிக்கும் பள்ளி
கோலிக்கு மண்ணை அனுப்பி, அவருக்கு ஆசீர்வதிக்கும் வகையில் பள்ளி அதனை வழங்க உள்ளது.
5. வண்டலூர்-வாலாஜாபாத் இடையே 6 வழி சாலைப்பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
வண்டலூர்-வாலாஜாபாத் 6 வழிச்சாலைப் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.